Connect with us

ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் ஒருசில பெண் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கிருத்திகா உதயநிதி . இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமான ‘வணக்கம் சென்னை’ படம் பட்டிதொட்டி எங்கும் தூள் கிளப்ப தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டார் .

இதையடுத்து சில சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘காதலிக்க நேரமில்லை’.

ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தற்போது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெற்றோர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்..!!

More in Cinema News

To Top