Connect with us

வாத்தியாராக வந்த விஜய் சேதுபதி – வெளியானது விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!!

Cinema News

வாத்தியாராக வந்த விஜய் சேதுபதி – வெளியானது விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!!

சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாக இருக்கும் விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் படம் தான் விடுதலை.

சூரி மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது . இந்நிலையில் இப்படம் இருபாகங்களாக வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் விடுதலை 2 எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமாக நிரம்பி வழிந்தது .

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடிக்கும் ‘விடுதலை-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இளையராஜா இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  500 கோடி கிளப்பில் இணைந்த ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா' திரைப்படம்..!!

More in Cinema News

To Top