Connect with us

அட்டகத்தி தினேஷ் – கலையரசன் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

Cinema News

அட்டகத்தி தினேஷ் – கலையரசன் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகர்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் நிலையில் அவர்களது நடிப்பில் வரும் மீட்டில் பட்ஜெட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

அந்தவகையில் ப.ரஞ்சித்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கால் பதித்த இளம் நடிகர்கள் தான் அட்டகத்தி தினேஷ் மற்றும் , கலையரசன். இவர்களது நடிப்பில் உருவான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அவர்களுக்கும் நல்ல பெயரை எடுத்துக்கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த இரு நடிகர்களும் தற்போது ஒரே படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்கம் இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீளம் புரொடக்சன்ஸ் தயாரித்து வருகிறது.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்திற்கு ‘தண்டகாரண்யம்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி பீரங்கி அணுகுண்டுகளால மட்டுமே முடியாது என்ற வாசகத்தை குறிப்பிட்டு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top