Connect with us

தனுஷ் இயக்கி உள்ள புதிய படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியானது..!!

Cinema News

தனுஷ் இயக்கி உள்ள புதிய படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியானது..!!

நடிகர் தனுஷ் இயக்கியுள்ள அடுத்த புதிய படமான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் சிங்கிளான Golden Sparrow பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது .

இந்திய சினிமவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். ராயன் என பெயர் கொண்ட இவரது 50 வது இவரே இயக்கி நடித்துள்ளார்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்ப்பை பெற்ற இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது.

நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் மீண்டும் தனது டைரக்டர் பணியை தொடங்கிவிட்டார் . அந்தவகையில் நடிகர் தனுஷ் இயக்கும் அந்த புதிய படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் படப்பிடிப்பும் சிறப்பாக நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான Golden Sparrow பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையில், அறிவு வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தனுஷ், ஜி.வி., அறிவு, சுப்லாஷினி ஆகியோர் பாடியுள்ளனர். நடிகை பிரியங்கா மோகன் இப்பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இதோ இந்த பாடலை நீங்களும் கேட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் BLOODY BEGGAR படத்தின் முதல் சிங்கிள் குறித்த அட்டகாச அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top