Connect with us

ஒலிம்பிக்கில் கெத்து காட்டும் இந்திய ஹாக்கி அணி – அயர்லாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!

Featured

ஒலிம்பிக்கில் கெத்து காட்டும் இந்திய ஹாக்கி அணி – அயர்லாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் விளையாடிய இந்திய ஹாக்கி அணி 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி அசத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெறுகிறது.

உலககெங்கும் இருக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவாக இருக்கும் இந்த ஒலிம்பிக் தொடரில் விளையாட்டு வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் என மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர்

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய ஹாக்கி அணி – அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பச்சமில்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஒலிம்பிக் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இரண்டில் வெற்றியும் 1 போட்டியை சமன் செய்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அமரன் படத்துக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பாராட்டு - நெகிழ்ச்சியில் படக்குழு..!!

More in Featured

To Top