Connect with us

ஆசிய கோப்பை தொடரில் 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி..!!

Featured

ஆசிய கோப்பை தொடரில் 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி..!!

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கெத்துக்காட்டியுள்ளது.

மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சர்வேதேச கிரிக்கெட் கவுசில் ஏராளமான தொடர்களை நடத்தி வரும் நிலையில் தற்போது 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது . அந்த அணியில் கிகப்பட்சமாக சுல்தானா 32 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் ஏதும் இன்றி 11 ஓவர்களில் இலக்கை கடந்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் 9வது முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கெத்து காட்டியுள்ளது.

இதுவரை நடந்துள்ள 9 ஆசிய கோப்பை தொடர்களில் அனைத்து சீசனிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதிரடி காட்டியுள்ள இந்திய அணி 7 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் ‘பெக்கர் வாலா’ பாடல் வெளியானது..!!

More in Featured

To Top