Connect with us

‘ஊர் வாசமும் உறவுகள் நேசமும்’ மாறாமல் வெளியானது ‘மெய்யழகன்’ படத்தின் ட்ரைலர்..!!

Cinema News

‘ஊர் வாசமும் உறவுகள் நேசமும்’ மாறாமல் வெளியானது ‘மெய்யழகன்’ படத்தின் ட்ரைலர்..!!

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் துள்ளலான நடிப்பில் உருவான மெய்யழகன் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் 5 ஸ்டார் நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்தி . அண்ணனை போலவே அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது தாறுமாறாக உருவாகி உள்ள திரைப்படமே மெய்யழகன்.

96 என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி உள்ள இப்படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து அரவிந்த் சாமி , ஸ்ரீவித்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர் .

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

கிராமத்து கதைக்களம் கொண்ட கதையாக உருவான இப்படத்தின் டீஸர் கடந்து சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஊர் வாசமும் உறவுகள் நேசமும் மாறாமல் உருவாகி உள்ள மெய்யழகன் படத்தின் ட்ரைலர் இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருவள்ளூர் அருகே பயணிகள் ரயில் விபத்து - வெளியான அதிர்ச்சி தகவல்..!!

More in Cinema News

To Top