Connect with us

கங்குவா படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் வெளியானது..!!

Cinema News

கங்குவா படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் வெளியானது..!!

சூர்யாவின் கங்குவா திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் ஆக்சன் நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா . இவரது நடிப்பில் உருவாகி தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ள திரைப்படமே கங்குவா . UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் மிரட்டலாக உருவாகி உள்ள இப்படம் வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னட,உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி உலககெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கள் பாடலான YOLO என்ற பாடல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மீண்டும் மன்மதனாகும் சிம்பு - வெளியானது STR49 படத்தின் அறிவிப்பு..!!

More in Cinema News

To Top