Connect with us

‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.

ரசிகர்கள் இப்படத்திற்கு கொடுத்த அமோக வரவேற்பால் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள இப்படத்திற்கு ‘சர்ஃபிரா’ என பெயரிடப்பட்டுள்ளது . மேலும் ‘சூரரைப் போற்று’ இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இப்படம் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அழகிய போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top