Connect with us

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அட்டகாச அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாராவின் பயபக்தியான நடிப்பில் கடந்த 2020 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படமே மூக்குத்தி அம்மன் .ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்திருந்த இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்து அசத்தியிருப்பார்.

காமெடி கலந்த சாமி படமாக ரசிகர்களை கவர்ந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமௌக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போதும் வரும் அதிலும் நயன்தாரா தான் நடிக்க உள்ளாரா போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்த நிலையில் இரண்டாம் பாகுபாம் உருவாக உள்ளதாகவும் அதிலும் நயன்தாரா தான் அம்மனாக நடிக்க உள்ளதாகவும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது . அதன்படி மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சதீஷ் நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியானது..!!

More in Cinema News

To Top