Connect with us

அம்மு அபிராமி நடிப்பில் உருவான ‘ஜமா’ படத்தின் டீசர் வெளியானது..!!

Cinema News

அம்மு அபிராமி நடிப்பில் உருவான ‘ஜமா’ படத்தின் டீசர் வெளியானது..!!

பாரி இளவழகன் இயக்கத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ள ஜமா படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் தான் நடிகை அம்மு அபிராமி.

ஆரம்பத்தில் சிறு சிறு காதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இன்று நாயகியாக களமிறங்கி கலக்கி வருகிறார். அந்தவகையில் தற்போது அபிராமி நாயகியாக நடித்துள்ள திரைப்படம் தான் ஜமா.

பாரி இளவழகன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சேட்டன், அம்மு அபிராமி, மணிமேகலை, வசந்த் மாரிமுத்து உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசரில் பார்க்கும் போது கிராமத்து பின்னணியில் மிகவும் எளிமையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது . தெருக்கூத்தில் பெண் வேடமிட்டு நடிக்கும் நாயகனுடன் அம்மு அபிராமி காதல் வயப்படுகிறார் இதனால் இவர்களை சுற்றி நடக்கும் இடையூறுகளே இப்படத்தின் கதையாக இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சதீஷ் நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியானது..!!

More in Cinema News

To Top