Connect with us

மக்களே அவன் வந்துட்டான் – ‘டிமான்ட்டி காலனி-2’ படத்தின் மிரளவைக்கும் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

மக்களே அவன் வந்துட்டான் – ‘டிமான்ட்டி காலனி-2’ படத்தின் மிரளவைக்கும் ட்ரெய்லர் வெளியானது..!!

அருள்நிதி – பிரியா பவானி சங்கர் காம்போவில் உருவாகி உள்ள ‘டிமான்ட்டி காலனி-2’ படத்தின் மிரளவைக்கும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்ப்பை பெற்று வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் ‘டிமாண்டி காலனி’ .

ரசிகர்களின் அளவில்லா அன்பை பெற்ற இப்படம் வசூலிலும் தூள் கிளப்பிய நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் அதை விட சிறப்பாக தரமாக உருவாகி உள்ளது .

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதியே இந்த படத்திலும் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் எப்போது படத்தின் ட்ரைலர் எப்போது என அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இந்த இரண்டுக்கும் பதில் கொடுக்கும் வகையில் படக்குழு தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது .

அதன்படி ரசிகர்களுக்கு ஈவினிங் ட்ரீட் கொடுக்கும் வகையில் இப்படத்தில் மிரளவைக்கும் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஏராளமான ட்விஸ்டுகள் இருக்கும் என்பதை நாம் இந்த ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.

இதோ இந்த ட்ரைலரை பார்த்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தஞ்சையில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு - டிடிவி தினகரன் கண்டனம்..!!

More in Cinema News

To Top