Connect with us

மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது அமரன் படத்தின் ட்ரைலர்..!!

Cinema News

மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது அமரன் படத்தின் ட்ரைலர்..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தரமாக தயாராகி உள்ள திரைப்படமே அமரன். குடும்ப நாயகன் எஸ்.கே கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் .

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ள நிலையில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் மிடுக்கான ராணுவ வீரராக நம்ப எஸ்.கே நடிக்க முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏராளமான சன்டை காட்சிகளுடன் தரமாக வெளியான இப்படத்தின் ட்ரைலர் இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவனத்தை ஈர்க்கும் ஆர்.ஜே.பாலாஜியின் “சொர்க்கவாசல்” படத்தின் டீசர்..!!

More in Cinema News

To Top