Connect with us

ரசிகர்கள் கவனம் ஈர்க்கும் ஜோக்கர்-2 படத்தின் ட்ரெய்லர்..!!

Cinema News

ரசிகர்கள் கவனம் ஈர்க்கும் ஜோக்கர்-2 படத்தின் ட்ரெய்லர்..!!

ஹாலிவுட் சினிமாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

ஹாலிவுட் திரையுலகில் கடந்த 2019ம் ஆண்டு டூட் பிலிப்ஸ் இயக்கத்தில் உருவான ஜோக்கர்-1 படம் உலகெங்கும் அமோக வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் படமாக உருவெடுத்தது .

இதுமட்டுமின்றி இந்த படத்திற்காக ஹாக்கின் பீனிக்ஸ்-க்கு ஆஸ்கர், கோல்டன் கிலோப் எனப் பல விருதுகளும் கிடைத்தது .

இந்நிலையில் இப்படத்தின் 2ம் பாகம் எப்போது என அனைவரும் காத்திருந்த நிலையில்
டூட் பிலிப்ஸ் இயக்கத்தில், ஹாக்கின் பீனிக்ஸ் நடிப்பில் ஜோக்கர் படத்தின் இரண்டாம் பாகம் தரமாக தயாராகி உள்ளது.

மாபெரும் பொருட்செலவில் தரமாக தயாரான இப்படத்தில் இருந்து தற்போது படக்குழு சிறப்பான ட்ரீட் ஒன்றை கொடுத்துள்ளது . அது என்னவென்றால் ஜோக்கர் 2 படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ள படக்குழு அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் பல தரமான சமபாவங்கள் இருக்கும் என்பதை ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது .

இதோ ஜோக்கர்-2 படத்தின் ட்ரெய்லர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தலைவரின் கூலி படத்தில் இணைந்த கட்டப்பா – சிறப்பு போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top