Connect with us

பதறவைக்கும் போர் காட்சிகளுடன் வெளியானது “கங்குவா” படத்தின் ட்ரைலர்..!!

Cinema News

பதறவைக்கும் போர் காட்சிகளுடன் வெளியானது “கங்குவா” படத்தின் ட்ரைலர்..!!

சூர்யாவின் அசத்தலான நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள “கங்குவா” படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது .

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து மாபெரும் பொருட் செலவில் தயாராகி உள்ள திரைப்படமே கங்குவா .

வரலாற்று கதைக்களம் கொண்ட இப்படத்தில் கதையின் நாயகனாக சூர்யா நடிக்க அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னட,உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி உலககெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

கங்குவா என்ற படம் உருவாகி வருவதாக இப்படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் படக்குழு பல அப்டேட்டுகளை கொடுத்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

ஏராளமான போர் சண்டை காட்சிகளை உள்ளடக்கிய இந்த ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேதி குறிச்சாச்சு மக்களே - சென்னையில் நடைபெறுகிறது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

More in Cinema News

To Top