Connect with us

திரையரங்குகளில் ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்த GOAT படத்தின் ‘மட்ட’ வீடியோ பாடல் வெளியானது..!!

Cinema News

திரையரங்குகளில் ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்த GOAT படத்தின் ‘மட்ட’ வீடியோ பாடல் வெளியானது..!!

திரையரங்குகளில் ரசிகர்களை குத்தாட்டம் போடவைத்த GOAT படத்தின் ‘மட்ட’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜாலி படங்களுக்கு பெயர்போன வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் அசரவைக்கும் நடிப்பில் உருவான திரைப்படமே தி கோட் .

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தரமாக தயாரான இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , மோகன் , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க . எஸ்.கே , திரிஷா உள்ளிட்ட பலர் கவுரவ கதாபாத்திரங்களில் படத்தில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தில் யுவன் இசையில் உருவான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘மட்ட’ எனும் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது இப்பாடலுக்கு விஜய் உடன் நடிகை திரிஷா நடனமாடி இருந்தார். இந்த பாடல் திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்த லப்பர் பந்து - இதுவரை செய்த வசூல் விவரம் இதோ..!!

More in Cinema News

To Top