Connect with us

கொட்டுக்காளி படத்திற்கு இசை அமைப்பாளர் இல்லையா..? இயக்குநர் கொடுத்த அதிர்ச்சி தகவல்..!!

Cinema News

கொட்டுக்காளி படத்திற்கு இசை அமைப்பாளர் இல்லையா..? இயக்குநர் கொடுத்த அதிர்ச்சி தகவல்..!!

சூரியின் அடுத்த படமான கொட்டுக்காளி படத்தில் இசையமைப்பாளரே இல்லை என அப்படத்தின் இயக்குநர் அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார்.

கூழாங்கல் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள படமே கொட்டுக்காளி . சூரி நாயகனமாக நடிக்கும் இப்படத்தில் அன்னாபென் உள்பட ஏரளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே பல சர்வேதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள நிலையில் இப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் செம செம ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் பி.வினோத்ராஜ் கூறியதாவது : நான் இயக்கிய ‘கூழாங்கல்’ உலகளவில் இத்தனை வரவேற்பைப் பெறும் என்று நினைக்கவில்லை. அந்த நம்பிக்கையில் தான் கொட்டுக்காளி படத்தை இயக்கி உள்ளேன் .

‘கொட்டுக்காளி’ என்பது தென் தமிழகத்தில் புழங்கும் மண் சார்ந்த ஒரு வார்த்தை. இந்தக் கதைக்கு அது பொருத்தமாக இருந்தது. நம் வாழ்வியலுக்கு மிகவும் நெருக்கமான படமாக இது இருக்கும். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் கிடையாது. லைவ் சவுண்ட் வைத்தே எடுத்திருக்கிறோம் என இயக்குநர் பி.வினோத்ராஜ் கூறியுள்ளார்.

வினோத்ராஜ் சொல்வதை வைத்து பார்த்தல் இந்த படத்தில் பாடலே இல்லை என்பது போல் தான் தெரிகிறது இருப்பினும் படத்தில் லைவ் சாங் போன்ற விஷத்தை இயக்குனர் கையாண்டுள்ளாரா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்காலம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top