Connect with us

அறிந்து கொள்வோம் மக்களே : சூறாவளிக்கு முன்பு செய்ய வேண்டியவை – சூறாவளியின்போது செய்ய வேண்டியவை..!!

Featured

அறிந்து கொள்வோம் மக்களே : சூறாவளிக்கு முன்பு செய்ய வேண்டியவை – சூறாவளியின்போது செய்ய வேண்டியவை..!!

வங்கக்கடலில் உருவாக உள்ள மிக்ஜாம் புயலின்போது சூறாவளி காற்று வீசும் என்பதால் பொது மக்கள் அனைவரும் சூறாவளிக்கு முன்பு செய்ய வேண்டியவை , சூறாவளியின்போது செய்ய வேண்டியவை ,சூறாவளிக்கு பின்பு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு பட்டியலாக வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை.

சூறாவளிக்கு முன்பு செய்ய வேண்டியவை :

  • சூறாவளி வருவதற்கு முன்பே உங்கள் இருப்பிடத்தைச் சோதனை செய்து பழுது பார்க்க வேண்டும் .

  • கதவுகள், ஜன்னல்கள், வாயில்களை உறுதிபட மூடிவைக்க வேண்டும்.

  • விலை உயர்ந்த பொருட்களையும், ஆவணங்களையும் நீர் புகாத பைகளில் பாதுகாத்து வைக்கவும்.

  • குறைந்தபட்சம் 7 நாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் குடிநீர் ஆகியவற்றைச் சேமித்து வைக்கவும்.

  • குடும்ப அவசரகால பெட்டியைத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

  • தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் பேட்டரியால் இயங்கும் வானொலி பெட்டிகளை இயங்கும் நிலையில் வைத்திருக்கவும் எச்சரிக்கை செய்திகளை தொடர்ந்து கேட்க வேண்டும்.

சூறாவளியின்போது செய்ய வேண்டியவை :

  • அரசு வெளியேற அறிவுறுத்தும் வரை, சூறாவளியின்போது வெளியில் செல்லாமல், பாதுகாப்பான கட்டடங்களில் தங்கியிருக்க வேண்டும்.

  • குடியிருப்பின் மேல்மாடிகளில் தங்கியிருப்பதைக் தவிர்க்கவும், தளப்பகுதியின் அருகிலேயே தங்கியிருக்கவும்.

  • சமீபத்திய செய்திகள், அறிவிப்புகளை வானொலி, தொலைக்காட்சி மூலம் தெரிந்துகொள்ளவும்.

  • பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களிலோ, மரத்தின் அருகிலோ தஞ்சமடைவதைத் தவிர்க்க வேண்டும்.
  • காற்றடிப்பது நின்றுவிட்டால் சூறாவளி முடிந்துவிட்டதாக நினைத்துவிட வேண்டாம் எதிர்திசையிலிருந்து வேகமான காற்று வீச ஆரம்பிக்கலாம்.

சூறாவளிக்கு பின்பு வேண்டியவை :

  • அதிகாரப்பூர்வமாக தற்போது பாதுகாப்பான சூழல் உள்ளது என அறிவிக்கப்படும் வரை பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம்.

  • சமையல் எரிவாயு கசிவு உள்ளதா என்பதைக் கண்டறியவும், ஈரமான நிலையில் மின்சாதனங்களை உபயோகிக்க வேண்டாம்.

  • வானொலி, தொலைக்காட்சி மூலம் எச்சரிக்கை அறிவிப்புகளைத் தொடர்ந்து கேட்கவும்.

  • துண்டித்து விழுந்த மின் கம்பிகள், பழுதுபட்ட பாலங்கள், கட்டடங்கள், மரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். வெள்ளம் சூழந்த இடங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்.

மிக்ஜாம் புயல் டிச.5 ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் இந்த விதிமுறைகள் அனைத்தையும் தவறாமல் கடைபிடித்து புயலில் இருந்து தற்காத்துக்கொள்ளுமாறு சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 60 ஆயிரமே வசூலித்த படம் - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!

More in Featured

To Top