Connect with us

தென்மாவட்டங்களில் வரலாறு காணாத பேய்மழை – பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்த திருமாவளவன் கோரிக்கை

Featured

தென்மாவட்டங்களில் வரலாறு காணாத பேய்மழை – பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்த திருமாவளவன் கோரிக்கை

தென்மாவட்டங்களில் வரலாறு காணாத பேய்மழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்த பல பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை விரைந்து மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி யுமான திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயலின்போது சிரமத்தில் இருந்த மக்களை தமிழக அரசு எப்படி மீட்டதோ அதே போல் தென் தமிழகத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கிட பலரும் வலுயுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் வெள்ளம் சூழ்ந்த பல பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை விரைந்து மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி யுமான திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமாவளவன் கூறியதாவது :

“நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வரலாறு காணாத வகையில், சுமார் 100செமீ. மழை பதிவாகியிருப்பது, யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாத அதிர்ச்சியளிக்கும் பேரிடராகும். இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பும் மதிப்பிடமுடியாத வகையில் உள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் என்னும் வானிலையால் அம்மாவட்டங்களிலுள்ள அணைகட்டுகள் பல திறந்து விடப்பட்டுள்ளன். அதனால், தாமிரபரணி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களின்றி பரிதவிக்கின்றனர்.

அரசு தமது மீட்பு பணிகள், நிவாரணப் பணிகளை மேலும் திறம்பட ஆற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மென்மேலும் பெருமழை தொடர்வதால் பீதியில் உறைந்து கிடக்கும் மக்களைத் பெருந்துயரிலிருந்து விரைந்து மீட்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

பாதிக்கப்படாத பிற மாவட்டங்களைச் சார்ந்த விசிக தோழர்கள், குறிப்பாக, முன்னணி பொறுப்பாளர்கள் இயன்ற வகையில் மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் தனது ட்விட்டர் பதிவில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Featured

To Top