Connect with us

“நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பட்ஜெட்” – முதல்வர் ஸ்டாலின்

Featured

“நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பட்ஜெட்” – முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சரால் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த பட்ஜெட்

வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இருக்கும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை.

எந்தப் பொருளுக்கும் வரிக்குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதும் இல்லை; சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.

உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை.

இப்படி ‘இல்லை… இல்லை…’ என்று சொல்வதற்காக எதற்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்?

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த இடைக்கால பட்ஜெட் ‘இல்லா நிலை’ பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.

எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்தகாலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை. நிகழ்கால பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை.

எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை. மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது

மத்திய அரசால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பட்ஜெட் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிகப் பெரிய வெற்றி விஜய்யின் முதல் மாநில மாநாடு - வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

More in Featured

To Top