Connect with us

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

Featured

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால்‌ கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்களை உடனே விடுக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறிருப்பதாவது :

IND-TN-10-MM-1061, IND-TN-08-MM-231, IND-TN-08-MM-385 மற்றும் IND-TN-06-MM-707 ஆகிய பதிவு எண்‌ கொண்ட மீன்பிடிப்‌ படகுகளில்‌ இராமநாதபுரம்‌ மற்றும்‌ புதுக்கோட்டை மாவட்டங்களைச்‌ சேர்ந்த 21 மீனவர்கள்‌ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கைக்‌ கடற்படையினரால்‌ 6-12-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப்‌ படகுகளும்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது.

மீன்பிடித்‌ தொழிலையே வாழ்வாதாரமாகக்‌ கொண்டுள்ள மீனவர்கள்‌, இலங்கைக்‌ கடற்படையினரால்‌ அடிக்கடி இதுபோன்று கைது செய்யப்படுவது அவர்களின்‌ வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது.

அந்தவகையில் தற்போது இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த 21 மீனவர்களையும்‌ அவர்களது பீன்பிடிப்புப்‌ படகுகளையும்‌ விடுவிப்பதோடு இலங்கைக்‌ கடற்படையினரால்‌ ஏற்கனவே பறிமுதல்‌ செய்யப்பட்டு அவர்களது வசமுள்ள 133 மீன்பிடிப்‌ படகுகளையும்‌ உடனடியாக விடுவிக்கக்‌ தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஓடிடியில் வெளியானது ஜீவாவின் 'பிளாக்' திரைப்படம்..!!

More in Featured

To Top