Connect with us

புத்தாண்டு கொண்டாட்டம் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு காவல்துறை..!!

Featured

புத்தாண்டு கொண்டாட்டம் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு காவல்துறை..!!

2024 புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் காத்திருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் – வழிகாட்டு நெறிமுறைகள் :

  • மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது . தடையை மீறி செயல்பட்டால் சட்டம் தன் கடமையை செய்யும்.

  • இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

  • குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

  • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும்.

  • புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது.

  • சென்னை மாநகரம் முழுவதும் தானியங்கி கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

  • சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு 18000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

  • மது அருந்தியவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது; வாடகை வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் மீறி வங்கம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா..? ‘அமரன்’ படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்..!!

More in Featured

To Top