Connect with us

தென் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு – முழு விவரம் உள்ளே

Featured

தென் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு – முழு விவரம் உள்ளே

தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வெல்ல பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டதை அடுத்து 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

▪️ வரலாறு காணாத இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக மீட்டு, குறுகிய காலத்தில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம்.

▪️ மக்களை உடனடியாக மீட்டெடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டியது தான் நம் தற்போது இருக்கக்கூடிய தலையாய கடமை. இந்தப் மீட்புப்பணிகளில் ராணுவம், NDRF. SDRF ஆகியவற்றோடு இணைந்து, காவல்துறையும், தீயணைப்பு துறையும், வருவாய்த்துறையும் தொடர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும்.

▪️ வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை உடனடியாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்க வேண்டும். இதற்கு தேவைப்படும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக புதிய முகாம்களை அமைத்திட வேண்டும்.

▪️ தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, உடைகள், போர்வைகள் போன்ற பொருட்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.

▪️ பக்கத்து மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை பெற்று தேவைப்படும் இடங்களுக்கு சரியான நேரத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டிய பணிகளையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும்.

▪️ நாம் அனைவரும் இணைந்து செயலாற்றி மக்களின் உயிர்களை காப்பாற்றி, அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டிட வேண்டிய சவாலான நேரமாக இது அமைந்திருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்த வானமே உந்தன் பின் - 'கங்குவா' படத்தின் 'தலைவனே' பாடல் வெளியானது..!!

More in Featured

To Top