Connect with us

சென்னையை புரட்டிப்போட்ட ‘மிக்ஜாம்’ புயல் – நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் நியமனம்..!!

Featured

சென்னையை புரட்டிப்போட்ட ‘மிக்ஜாம்’ புயல் – நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் நியமனம்..!!

வங்க கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் சென்னை மாநகரமே தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது . இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் காக்க புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

  • சட்டத்துறை அமைச்சர்‌ திரு. எஸ்‌. இரகுபதி அவர்கள்‌. கே.கே. நகர்‌ மற்றும்‌ எம்‌.ஜி.ஆர்‌. நகர்‌ பகுதிகளுக்கு நியமனம்.
  • சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ காலநிலை மாற்றத்‌ துறை அமைச்சர்‌ திரு. சிவ,வீ. மெய்யநாதன்‌ , செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்‌ ஆகிய பகுதிகளுக்கு நியமனம்.
  • பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்‌ துறை அமைச்சர்‌ திரு ஆர்‌.எஸ்‌. ராஜகண்ணப்பன்‌ அவர்கள்‌ இராயபுரம்‌ பகுதிக்கு நியமனம் .
  • ஏற்கனவே நியமிக்கப்பட்ட பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ திரு. அன்பில்‌ மகேஷ்‌ பொய்யமொழி அவர்கள்‌ வில்லிவாக்கம்‌, அண்ணா நகர்‌, அம்பத்தூர்‌. கே.கே. நகர்‌ ஆகிய பகுதிகளுடன்‌ கூடுதலாக அரும்பாக்கம்‌ பகுதிகளுக்கு நியமனம்
  • சென்னை, எழிலகத்தில்‌ உள்ள வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மை துறையின்‌ மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில்‌ வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளைக்‌ கண்காணித்து, அலுவலர்களுக்கு மீட்புப்‌ பணிகளுக்குத்‌ தேவையான உத்தரவுகளை வழங்கி, மீட்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணி, நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பொதுமக்களிடம்‌ இருந்து வரும்‌ அழைப்புகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும்‌ வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ திரு. கே.கே.எஸ்‌.எஸ்‌ ஆர்‌. ராமச்சந்திரன்‌ அவர்களுடன்‌ தொலைக்காட்சி மற்றும்‌ சமூக வலைதளங்களில்‌ வெளிவரும்‌ மழை வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ தொடர்பான செய்திகளை சேகரித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து மீட்புப்‌ பணி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழில்‌, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்‌ வர்த்தகத்‌ துறை அமைச்சர்‌ முனைவர்‌ டி.ஆர்‌.பி. ராஜா அவர்களையும்‌ நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்‌.
  • வனத்துறை அமைச்சர்‌ மருத்துவர்‌ மா. மதிவேந்தன்‌ மற்றும்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு. கே.ஆர்‌.என்‌. ராஜேஷ்‌ குமார்‌ ஆகியோரை திருவொற்றியூர்‌ பகுதிக்கு நியமித்து நிவாரணம்‌ மற்றும்‌ சீரமைப்புப்‌ பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DEFINITELY NOT : 2025 IPL-ல் தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

More in Featured

To Top