Connect with us

சர்ஃபிரா’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

Cinema News

சர்ஃபிரா’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது .

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியானது.

என்னதான் OTTயில் வெளியானாலும் ரசிகர்கள் இப்படத்தை தாறுமாறாக கொண்டாடி தீர்த்தனர் இதன் காரணமாக இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள இப்படத்திற்கு ‘சர்ஃபிரா’ என பெயரிடப்பட்டுள்ளது . மேலும் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top