Connect with us

மீண்டும் தெலுங்கு திரையுலகில் திரிஷா..இவருடன் தான் ஜோடி போட போறாங்க!

Cinema News

மீண்டும் தெலுங்கு திரையுலகில் திரிஷா..இவருடன் தான் ஜோடி போட போறாங்க!

தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் பிஸியான முன்னணி நடிகை யார் என்று கேட்டால் அனைவரும் அறிந்த ஒருவர் என்றால் அது நடிகை திரிஷாவாக தான் இருக்கும்…அவரின் இந்த பயணம் அனைவராலும் கொண்டாட பட்டு வருகின்றது…

விஜய்யுடன் லியோ படத்தை முடித்த கையோடு அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்…இதை தொடர்ந்து கமலின் 234வது படத்தில் மணி ரத்னம் இயக்கித்தில் வரும் படத்தில் நடிக்கவுள்ளார்…

இதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது மேலும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ராம் பார்ட் 1 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

இப்படி தொடர்ந்து தன்னை பிஸியாக வைத்திருக்கும் நடிகை திரிஷா அடுத்ததாக அல்லு அர்ஜுனின் 22வது படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது…இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது இப்படி ஒரு பிசி நடிகையாக இருக்காரே என அனைவரும் இவரை பாராட்டி வருகின்றனர்..

இந்த அல்லு அர்ஜுன் படத்தின் வேலைகளுக்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ.300 கோடி என்கின்றனர்.இப்படத்தை தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கவுள்ளாராம். இதன்மூலம் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக திரிஷா நடிக்கவுள்ளார்..

அதனால் அங்கும் மிக பெரிய மார்க்கெட் வர இருக்கிறது என அனைவரும் இந்த படத்தை பற்றி அதிகம் பேசி வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேபிள் டிவி-க்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திடுக - டிடிவி தினகரன் வேண்டுகோள்..!!

More in Cinema News

To Top