Connect with us

மீண்டும் தொடங்கியது ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு – வீடியோவுடன் வெளியான டக்கர் அப்டேட்..!!

Cinema News

மீண்டும் தொடங்கியது ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு – வீடியோவுடன் வெளியான டக்கர் அப்டேட்..!!

நடிகர் அஜித் குமாரின் மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியுள்ளதாக அசத்தலான வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை கொண்டு தமிழ் சினிமா புகழின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித்குமார் . இவரது நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் தான் விடாமுயற்சி.

மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அஜர்பைஜான் நாட்டில் பல மாதங்களாக முழு வீச்சில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்புக்கு குட்டி பிரேக் விடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு துவங்கி உள்ளது .

படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து படப்பிடிப்பு புத்துணர்ச்சியுடன் துவங்கி உள்ளதாக அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்..? வெளியான தாறுமாறு தகவல்..!!

More in Cinema News

To Top