Connect with us

விஜய் ஆண்டனி – சரத்குமார் காம்போவில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

Cinema News

விஜய் ஆண்டனி – சரத்குமார் காம்போவில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது..!!

விஜய் ஆண்டனி – சரத்குமார் காம்போவில் உருவாகி உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கால் பதித்து இன்று இயக்குநராகவும் நடிகராகவும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன்.

விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார் , மேகா ஆகாஷ் ஆகியோருடன் பல இளம் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர் .

இன்ஃபினிட்டி ஃபிலிம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆச்சு ராஜாமணி மற்றும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளனர் .

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையத்தில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

இளையராஜாவின் ‘உறவுகள் தொடர்கதை’ பாடலுடன் தொடங்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் ட்ரைலர் இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஸ்வரூபம் எடுக்கும் அன்னபூர்ணா விவகாரம் - இதைவிட சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்? கருணாஸ் காட்டம்..!!

More in Cinema News

To Top