Connect with us

விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ பட ட்ரைலர் வெளியானது..!!

Cinema News

விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ பட ட்ரைலர் வெளியானது..!!

விஜய் ஆண்டனியின் எதார்த்த நடிப்பில் உருவாகி உள்ள ‘ஹிட்லர்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் , நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் தான் ஆல்ரவுண்டர் விஜய் ஆண்டனி .

தனித்துவமான கதைகளை தேடி தேடி தேர்ந்துஎடுத்து நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படமே ஹிட்லர்.

தனா இயக்கியுள்ள உருவாகி உள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி நடிக்க அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார் மேலும் இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவான இப்படத்தின் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் மிடுக்கான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

எழுச்சி மூட்டும் வசனங்களுடன் வெளியாகி உள்ள ஹிட்லர் படத்தின் ட்ரைலர் இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top