Connect with us

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுக படுத்தினார் அக்கட்சியின் தலைவர் விஜய்..!!

Featured

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுக படுத்தினார் அக்கட்சியின் தலைவர் விஜய்..!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை இன்று அறிமுகபடுத்தி கட்சின் ஆன்தம் பாடலையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார் . இதையடுத்து தான் 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் தேர்தலுக்கு முன் நடிப்பதில் இருந்து முழுமையாக விலக உள்ளதாகவும் அறிவித்திருந்தார் .

இதையடுத்து இரண்டு கோடி உறுப்பினர்கள்‌ என்ற இலக்கை நிர்ணயித்துள்ள நடிகர் விஜயின் சொல்லுக்கிணங்க அவரது கட்சியில் ஏராளமான உறுப்பினர்கள் இன்று வரை சேர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகக் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் . சென்னையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கொடி கம்பத்தில் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி அதனை வானுயர ஏற்றி வைத்தார் .

இதையடுத்து தனது கட்சிக்கான ஆன்தம் பாடலையும் விஜய் வெளியிட்டு உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

More in Featured

To Top