Connect with us

“இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இதுதானா?!”

Cinema News

“இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இதுதானா?!”

தமிழ் சினிமாவில் தென்மேற்குப் பருவக்காற்று என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர், நடிகர் விஜய்சேதுபதி. இவர் படிப்படியாக பீட்ஸா, பண்ணையாரும் பத்மினியும், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சேதுபதி, நானும் ரவுடி தான், காதலும் கடந்துபோகும், இறைவி, தர்ம துரை, ஆண்டவன் கட்டளை, விக்ரம் வேதா, 96, சீதக்காதி எனப்படிபடியாக வளர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாகவும் பரிணமித்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து விஜய் சேதுபதி தனக்கென ஒரு அடையாளத்தை இந்திய திரையுலகில் உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்னும் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 1 முதல் நடக்கவிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார். முன்னதாக, இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் அனைத்தும் பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பினைப் பெற்றவை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவில் நாளை ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள் - லிஸ்ட் இதோ…!!

More in Cinema News

To Top