Connect with us

வெற்றிநடை போடும் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் – லேட்டஸ்ட் வசூல் விவரம் இதோ..!!

Cinema News

வெற்றிநடை போடும் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் – லேட்டஸ்ட் வசூல் விவரம் இதோ..!!

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள விஜய் சேதுபதியின் 50வது படமான மஹாராஜா திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருந்து தற்போது இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக வளர்ந்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘மகாராஜா’

பார்த்து பார்த்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் மக்கள் செல்வனுடன் சேர்ந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் செதுக்கப்பட்ட இப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி உலகம் முழுதுவம் உள்ள திரையரங்குகளில் வெளியானது .

இப்படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்கள் பெற்று வந்த நிலையில் தற்போது வசூலிலும் சக்கை போடு போட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி மஹாராஜா திரைப்படம் வெளியான 5 நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ. 45 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு சிறப்பான தரமான படம் வெளியாகி உள்ளதால் சேதுபதியின் ரசிகர்கள் தற்போது குஷியில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராகுல்காந்திக்கு இட ஒதுக்கீடு பற்றி என்ன தெரியும்..? - வானதி சீனிவாசன் விமர்சனம்..!!

More in Cinema News

To Top