Connect with us

100 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் – சிறப்பு போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!!

Cinema News

100 நாட்களை கடந்து வெற்றி நடைபோடும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் – சிறப்பு போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!!

விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா திரைப்படம் 100 நாட்களை கடந்து வெற்றி நடைபோட்டு வருவதாக படக்குழு சிறப்பு போஸ்டருடன் கூடிய அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வெற்றிநடைபோடும் மாஸ் ஹீரோககிளில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என வெறித்தனமான ரசிகர்களால் அன்போடு அளிக்கப்படும் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவான திரைப்படமே மகாராஜா.

குரங்குபொம்மை என்ற அற்புதமான படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி ,நட்டி , மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த ஜூன் மாதம் உலகம் முழுதுவம் உள்ள திரையரங்குகளில் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்த நிலையில் தற்போது 100 நாட்களை கடந்து வெற்றி நடைபோட்டு வருவதாக படக்குழு சிறப்பு போஸ்டருடன் கூடிய அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இப்படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியான நிலையில் அதிக பார்வையாளர்கள் பார்த்த படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ள குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'மனசிலாயோ' பாடலுக்கு செம ஸ்டைலாக நடனமாடிய அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் - வைரல் வீடியோ..!!

More in Cinema News

To Top