Connect with us

OTTயில் சிறப்பான சாதனை படைத்த விஜய்சேதுபதியின் மகாராஜா திரைப்படம்..!!

Cinema News

OTTயில் சிறப்பான சாதனை படைத்த விஜய்சேதுபதியின் மகாராஜா திரைப்படம்..!!

திரையரங்குகளில் சக்கை போடு போட்ட விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் OTTயில் வெளியான நிலையில் தற்போது சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோககிளில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என ரசிகர்களா அன்போடு அளிக்கப்படும் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமே மகாராஜா.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுதுவம் உள்ள திரையரங்குகளில் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்தது.

வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்த இப்படம் கடந்த மாதம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சிறப்பான தரமான சாதனை ஒன்றை இப்படம் படைத்துள்ளது.

உலகளவில் பிரபலமான நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகளவில் பார்க்கப்பட்ட 5வது திரைப்படமாக (Non-English) மகாராஜா திரைப்படம் உருவெடுத்து சாதனை படைத்துள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சதீஷ் நடிப்பில் உருவான ‘சட்டம் என் கையில்’ படத்தின் டீசர் வெளியானது..!!

More in Cinema News

To Top