Connect with us

பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் விஜயகாந்தின் இளைய மகன் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் விஜயகாந்தின் இளைய மகன் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தனது அசத்தலான ஆக்சன் நடிப்பால் எண்ணற்ற ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த் . நடிப்பை தாண்டி சமூக சேவையில் அதீத ஆர்வம் கொண்ட நடிகர் விஜயகாந்த் ஆரம்பத்தில் திமுகவுடன் இணைந்து அரசியல் செய்து வந்த நிலையில் பின்னர் அதில் இருந்து வெளியேறி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து உடல்நல கோளாறு காரணமாக நடிப்பு மற்றும் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவியான பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவின் பொதுச்செயலாளராக பதிவு ஏற்றுக்கொண்டு கட்சியை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் வலம் வர இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது இவரது நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சண்முகப் பாண்டியன் நடிக்கும் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்புக்கிடையே உருவாக உள்ள இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது?- ஹெச்.ராஜா

More in Cinema News

To Top