Connect with us

“லிப்ட்டில் டான்ஸ் ஆடிய பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா! வைரல் Cute Video! என்ன பாட்டா இருக்கும்?!”

Cinema News

“லிப்ட்டில் டான்ஸ் ஆடிய பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா! வைரல் Cute Video! என்ன பாட்டா இருக்கும்?!”

நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் அவரத பொன்னியின் செல்வன் 2 மற்றும் முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மல்ட்டி ஸ்டார் படங்களாக வெளியான இந்தப் படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்திருந்தார் ஜெயம்ரவி. இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது இறைவன் படம் வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

இந்நிலையில் அடுத்ததாக ஜெயம்ரவி நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கிவரும் பிரதர் படம் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. காமெடி மற்றும் சகோதர – சகோதரியின் பாசத்தை மையமாக கொண்டு இநத்பப் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் ஜெயம்ரவியின் அக்காவாக பூமிகா நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்துள்ளார். கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் படத்தின் நாயகி பிரியங்கா மோகன், பூமிகா, சீதா மற்றும் சரண்யா ஆகியோர் காணப்படுகின்றனர். முன்னதாக சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா நடித்து வெளியான டான் படத்தின் டிக்டாக் பாடலின் இசைக்கு இவர்கள் ஆட்டம் போட்டுள்ளனர். குறிப்பாக அதிக உற்சாகத்துடன் பூமிகா ஆட்டம் போட்டதை இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.

லிப்டிற்குள் உள்ள கண்ணாடியை பார்த்து இவர்கள் இந்த ஆட்டத்தை போட்டுள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தை ஜனவரி 26ம் தேதி குடியரசு தினக் கொண்டாட்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி பிரம்மாண்டமாக உருவாகிவரும் ஜெனி படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ பட ட்ரைலர் வெளியானது..!!

More in Cinema News

To Top