Connect with us

இப்ப எல்லாருக்கும் சந்தேகம் தீந்திருச்சா – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலியின் சகோதரர்..!!

Featured

இப்ப எல்லாருக்கும் சந்தேகம் தீந்திருச்சா – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலியின் சகோதரர்..!!

விராட் கோலியின் அம்மாவின் உடல் நிலை குறித்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில் தற்போது அனைத்து வதந்திகளுக்கு கோலியின் சகோதரர் முற்று புள்ளி வைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து இருந்து விராட் விலகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் மீண்டும் விராட் விலகியது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நெட்டிசன்கள் விராட் கோலி மற்றும் அவரது குடும்பத்தில் எதோ பிரச்சனை நடக்கிறது அதனால் தான் விராட் கோலி விளையாட்டில் கவனம் செலுத்தாமல் பல போட்டிகளில் இவர்ந்து விலகி வருகிறார் என பல தவரானான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இவை அனைத்தும் சற்று எல்லை மீற விராட் கோலியின் அம்மாவிற்கு உடல் நிலை சரி இல்லை இதனால் தான் அவர் அடிக்கடி முக்கிய போட்டிகளில் இருந்து விலகி அம்மாவை சந்திக்க செல்கிறார் என கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த அணைத்து வதந்திகளுக்கு விராட் கோலியின் சகோதரர் முற்று புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் கொடுத்துள்ளார்.

“என்னுடைய தாயின் உடல்நிலை தொடர்பாக பரவிவரும் தகவல்களில் உண்மையில்லை, அவர் நலமாக உள்ளார். மக்கள் மற்றும் ஊடகங்கள் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய படங்களின் வேலைகளை தொடங்க வேண்டாம் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

More in Featured

To Top