Connect with us

3வது டி20 போட்டி : பந்துவீச்சில் அசத்திய வாஷிங்டன் சுந்தர் – இந்திய அணியிடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே அணி..!!

Featured

3வது டி20 போட்டி : பந்துவீச்சில் அசத்திய வாஷிங்டன் சுந்தர் – இந்திய அணியிடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே அணி..!!

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 3 வது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Harare Sports Club மைதானத்தில் இன்று நடைபெறும் 3வது டி20 போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது .

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை தொடங்கிய நிலையில் ஜெய்ஸ்வால் 36 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து அதிரடியாக ஆடிய கேப்டன் கில் அரைசதம் கடந்து 66 ரன்களில் வெளியேறினார் . இதையடுத்து வந்த அபிஷேக் 10 ரன்களில் விக்கெட்டை இலக்க பொறுப்புடன் விளையாடி வந்த ருதுராஜ் 49 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடியில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது.

எதிரணி கொடுத்த இலக்கை கடக்க களமிறங்கிய ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களை இந்திய அணியின் பவுலர்கள் பந்துகளை கொண்டு அட்டாக் செய்தனர்.

ஜிம்பாப்வே அணியில் டியான் மயேர்ஸ் மட்டும் அரைசதம் கடந்து தனி ஆளாக போராடிய நிலையில் அவருக்கு பக்கபலமாக வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையை கட்டியதால் ஜிம்பாப்வே அணி தோல்வியை நோக்கி வேகமாக சென்றது

இறுதியில் 20 ஓவர்கள் முடியில் 6 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் கலீல் 1 விக்கெட்டும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் , வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் எடுத்து அசத்தினர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் ‘Bloody Beggar’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு..!!

More in Featured

To Top