Connect with us

விவசாய நலனுக்கு மத்திய அரசு என்ன செய்தது? – கமல்ஹாசன் எழுச்சி உரை..!!!

Featured

விவசாய நலனுக்கு மத்திய அரசு என்ன செய்தது? – கமல்ஹாசன் எழுச்சி உரை..!!!

டெல்லியில் ஆணிப் படுக்கை போட்டு விவசாயிகளை வரவேற்றத்தை தவிர்த்து இந்த 10 வருடத்தில் விவசாய நலனுக்காக மத்திய அரசு என்ன செய்தது என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார் அப்போது அங்கு கூடிருந்த மக்களிடம் எழுச்சி உரையாற்றிய கமல்ஹாசன் கூறியதாவது :

முதல்வராக இருந்த போது கலைஞர் உழவர் சந்தைகளை அமைத்துக் கொடுத்தார்; ரூ.7,000 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தவர் கலைஞர் விவசாயிகள் நலனுக்கு மோடி அரசு என்ன செய்தது?

டெல்லியில் ஆணிப் படுக்கை போட்டு விவசாயிகளை வரவேற்றத்தை தவிர்த்து இந்த 10 வருடத்தில் விவசாய நலனுக்காக மத்திய அரசு என்ன செய்தது

ஜிஎஸ்டி முதன் முதலில் இந்த ஒன்றிய அரசு கொண்டு வந்த போது, அன்று அரசியலுக்கு வரவில்லை. இருந்தாலும் திரைத்துறையில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல் என்னுடையது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எமோஷனல் காட்சியில் அபாரம் காட்டிய கவின் - Bloody Beggar படக்குழுவுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புகழாரம்..!!

More in Featured

To Top