Connect with us

கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படத்தின் டிரைலர் எப்போது தெரியுமா..? வெளியான டக்கர் அறிவிப்பு..!!

Cinema News

கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படத்தின் டிரைலர் எப்போது தெரியுமா..? வெளியான டக்கர் அறிவிப்பு..!!

கமல்ஹாசன் நடிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன் . இப்படத்தின் அசுர தனமான வெற்றிக்கு பின் கடந்த 2019ஆம் ஆண்டு இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாக ஆரம்பித்தது .

பூஜை போட்டு ஆரபிக்கப்பட்ட இப்படம் அடுத்தடுத்து பல இன்னல்களை சந்தித்து தற்போது தான் ஒருவழியாக அணைத்து வேலைகளையும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது .

இந்தியன் படத்திற்கு இசை புயல் இசையமைத்திருந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார் .

இதுமட்டுமின்றி இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

இப்படத்தின் பாடல்கள் ஒவொன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியன் 2 படத்தின் டிரைலர் வரும் ஜுன் 25ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமலின் ‘சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top