Connect with us

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை அணி..!!

Featured

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் – முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை அணி..!!

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்று வசதியுள்ளது .

மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சர்வேதேச கிரிக்கெட் கவுசில் ஏராளமான தொடர்களை நடத்தி வரும் நிலையில் தற்போது 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த தொடரில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய – இலங்கை அணிகள் மோதியது . இந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது . அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மிர்தி மந்தனா 60 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. இலங்கை அணியில் அதிரடியாக விளையாடிய சமாரி 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹர்சிதா அதிரடி ரன்குவிப்பில் இறங்கினார் இறுதி வரை அதிரடியை தொடர்ந்த அவர் இலங்கை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

இதையடுத்து 18.4 ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

இதற்கு முன்பாக 5 முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள இலங்கை அணி, 5 முறையும் இந்திய அணியுடன் தோல்வியை சந்தித்து கோப்பையை நழுவவிட்டது.

6வது முறையாக இன்று மீண்டும் இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொண்ட இலங்கை அணி வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பையை முத்தமிட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Break எடுத்த ஊழியரை பணி இடத்திலேயே சுட்டு கொன்ற சக ஊழியர் - அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

More in Featured

To Top