Connect with us

இளம் வயதில் இரட்டை சதமடித்த மூன்றாவது இந்தியர் ஆனார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

Yashasvi_Jaiswal

Featured

இளம் வயதில் இரட்டை சதமடித்த மூன்றாவது இந்தியர் ஆனார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார். அவர் 277 பந்துகளில் 18 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.

22 வயது மற்றும் 37 நாட்களில் இந்த இலக்கை எட்டியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய மூன்றாவது இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக, வினோத் காம்ப்ளி 21 வயது மற்றும் 32 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சுனில் கவாஸ்கர் 21 வயது மற்றும் 227 நாட்களில் இந்த இலக்கை எட்டி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதற்கிடையே போட்டியைப் பொறுத்தவரை டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா இரண்டாம் நாளில் தற்போதைய நிலவரப்படி 8 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்களுடன் ஆடி வருகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், சோயப் பஷீர் மற்றும் ரெஹான் அகமது தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ப்ரீ புக்கிங்கில் பட்டய கிளப்பும் புஷ்பா2 - இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா..?

More in Featured

To Top