Connect with us

பிரபல தமிழ் நடிகர் மீது பாலியல் புகார் கொடுத்த இளம் நடிகை – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Cinema News

பிரபல தமிழ் நடிகர் மீது பாலியல் புகார் கொடுத்த இளம் நடிகை – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ரியாஸ் கான் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வில்லன் நடிகராக நடித்து தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடம்பிடித்தவர் தான் நடிகர் ரியாஸ் கான். ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

உமா ரியாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் . அதில் இவரது மூத்த மகன் ஷ்ரிக்கிற்கு அண்மையில் தான் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் நடிகர் ரியாஸ் கான் மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ரேவதி சம்பத் தான் நடிகர் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் கூறி இருக்கிறார். அவர் தன்னை பாலியல் ரீதியாக அணுகினார் எனவும் போனில் மிகவும் தப்பு தப்பாக பேசினார் என்றும் புகார் தெரிவித்து இருக்கிறார்.

என்னுடன் உடலுறவுக்கு சம்மதிக்கும் உனது தோழிகள் யாராவது இருந்தால் சொல்லு என்றும் ரியாஸ் கான் தன்னிடம் கேட்டதாக ரேவதி சம்பத் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top