Connect with us

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது ஜிம்பாப்வே..!!

Featured

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றது ஜிம்பாப்வே..!!

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் டி20 தொடரில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சுப்மன் கில்லின் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது .

அந்தவகையில் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Harare Sports Club மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே மோதியது .

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்த ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறி நின்றனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 115 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.

எளிய இலக்கை அசால்டாக கடந்துவிடலாம் என்ற மெத்தனத்தில் விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா எந்த ரன்னும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேற கேப்டன் கில் மட்டும் தனி ஆளாக அணியின் வெற்றிக்கு போராடினார்.

பொறுப்புடன் விளையாடி வந்த கில்லும் 31 ரன்களில் வெளியேற அடுத்த வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர் .

இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி வெறும் 102 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு மிகக் குறைந்த ரன்களை இலக்காக நிர்ணயித்து, அதனை வெற்றிகரமாக Defend செய்த அணி என்ற பெருமையை ஜிம்பாப்வே அணி பெற்றுள்ளது.

இதேபோல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தோல்வியின் மூலம், இந்த ஆண்டில் (2024) டி20 போட்டியில் முதல் தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More in Featured

To Top